உத்தவர், அவரது குழந்தை பருவத்திலிருந்து கிருஷ்ணருடன் இருந்தவர், கிருஷ்ணனின் சாரதியாகவும், பல வழிகளில் அவருக்கு சேவைகள் செய்தும் வந்தவர். ஸ்ரீ கிருஷ்ணனிடமிருந்து எந்தவொரு ஆசை அல்லது வரம் வேண்டுமென்றும் அவர் கேட்டதில்லை. கிருஷ்ணர் அவரின் அவதாரத்தை நிறைவு செய்யும் விளிம்பில் இருந்தபோது, அவர் உத்தவரை அழைத்து, " நண்பா உத்தவா! என்னுடைய இந்த அவதாரத்தில் பல பேர் என்னிடமிருந்து வரங்களைக் கேட்டிருக்கிறார்கள்; ஆனால் நீ என்னிடம் எதுவும் கேட்கவில்லை. இப்போது ஏன் நீ என்னிடம் ஏதாவது கேட்கக்கூடாது? நான் உனக்கு அதைத் தருவேன். நானும் உனக்கு எதாவது நன்மை செய்த திருப்தியுடன் இந்த அவதாரத்தை முடிக்க விரும்புகிறேன்." என்றார்.
உத்தவர், தனக்காக எதையும் கேட்கவில்லை என்றாலும், அவர் கிருஷ்ணனை தனது குழந்தை பருவத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவர் எப்போதும் கிருஷ்ணனின் போதனைகள் மற்றும் செயல்களுக்கு இடையிலான சம்பந்தமற்ற நிலை பற்றி ஆச்சரியப்பட்டார். அந்தக் காரணங்களை புரிந்து கொள்ள விரும்பி அவர் கிருஷ்ணனைக் கேட்டார். 'கிருஷ்ணா!, நீ எங்களை வாழச் சொன்ன விதம் வேறு. ஆனால் நீ வாழ்ந்த விதம் வேறு. இந்த மகாபாரத நாடகத்தில் நீ நடித்த பாத்திரத்தில், உன் செயல்களில், எனக்கு பல விஷயங்கள் புரியவில்லை. உன் செயல்களுக்கான காரணங்களை புரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். என் ஆசையை நிறைவேற்ற முடியுமா? '.
கிருஷ்ணர் உத்தவரிடம், 'குருஷேத்திர போர் நடந்தபோது அர்ஜுனனிடம் நான் கூறியது பகவத் கீதை . இன்று, உனக்கு நான் கூறும் இந்த பதில் உத்தவ கீதை என அழைக்கப்படும். அதனால்தான் நான் உனக்கு இந்த வாய்ப்பை அளித்தேன். தயக்கமின்றி கேள்.' என்றார்.
உத்தவர் கேட்க தொடங்குகிறார். - 'கிருஷ்ணா, முதலில் உண்மையான நண்பன் என்பவன் யார்?'
கிருஷ்ணர் கூறுகிறார், " எவனொருவன் தன் நண்பனின் நிலை அறிந்து அவன் கேட்காமலே உதவுகிறானோ அவனே உணமையான நண்பன்."
உத்தவர்: 'கிருஷ்ணா, நீ பாண்டவர்களின் நண்பன். அவர்கள் உன்னை தங்களுடைய ஆபத்பாந்தவனாக முழுமையாக நம்பினார்கள். கிருஷ்ணா, என்ன நடக்கிறது என்று மட்டும் உனக்கு தெரியாது, ஆனால் என்ன நடக்கும் என்பதுவும் உனக்குத் தெரியும். நீ முக்காலமும் அறிந்த ஞாநி. இப்போது நீ ஒரு உண்மையான, நெருங்கிய நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்று கூறினாய். பின் நீ ஏன் அவ்வாறு செயல்படவில்லை? ஏன் தருமன் (யுதிஷ்டிரன்) சூது விளையாடுவதை தடுக்கவில்லை? சரி, நீ அவ்வாறு செய்யவில்லை; தருமனுக்கு ஆதரவாக நீங்கள் ஏன் அதிர்ஷ்டத்தை மாற்றவில்லை, இதன் மூலம் தர்மம் வெற்றிபெறுவதை நீ உறுதி செய்திருக்கலாம். நீ அவ்வாறு செய்யவில்லை. அவரது செல்வம், நாடு மற்றும் தன்னை இழந்த பிறகாவது தருமனை காப்பாற்றி இருக்கலாம். சூதாட்டத்திற்கான தண்டனையிலிருந்து நீ அவரை விடுதலை செய்திருக்கலாம். அல்லது, அவர் சகோதரர்களை பந்தயம் வைக்க ஆரம்பித்தபோது நீ மண்டபத்தில் நுழைந்திருக்கலாம். நீ அதை செய்யவில்லை. துரியோதனன் தருமன் பாஞ்சாலியை பணயமாக வைத்து வெற்றி பெற்றால் தருமர் இழந்த எல்லாவற்றையும் திருப்பி தருவதாக தூண்டும் போதாவது நீ தலையிட்டிருக்கலாம். உன் தெய்வீக சக்தியால் தருமருக்கு சாதகமாக பகடை எண்கள் விழும் வண்ணம் ஒரு வழியை நீ ஏற்படுத்தி இருக்க முடியும். அதற்கு பதிலாக, திரௌபதி கிட்டத்தட்ட தனது மானத்தை இழந்தபோது நீ தலையிட்டாய். அவள் ஒரு மனிதனால் மண்டபத்தில் இழுத்து, பல மக்களுக்கு முன்னால் துகிலுரியப்பட்ட பிறகு நீ துணிகளை கொடுத்து, திரௌபதியின் மானத்தை காப்பாற்றினாய் என்று கூறிவிட்டாய்; நீ இதை எப்படிக் கூறலாம்? பெண்ணிற்கு ஏது பெருமை ? நீ எதை காப்பாற்றினாய் ? துன்பத்தின் போது ஒருவருக்கு உதவி செய்வதால் மட்டுமே உன்னை ஆபத்பாந்தவனாக கூற இயலும். நீ நெருக்கடி காலத்தில் தக்க உதவி செய்யவில்லை என்றால், என்ன பயன்? இது தான் தருமமா?'. உத்தவர் இந்த கேள்விகளை எழுப்பிய போது , கண்ணீர் அவரது கண்களில் இருந்து உருண்டு ஓடியது.
இவை அவரது கேள்வி மட்டும் அல்ல. மகாபாரதத்தை வாசித்த அனைவருமே இந்த கேள்விகளைக் கொண்டுள்ளனர். நம் சார்பாக உத்தவர் ஏற்கனவே கிருஷ்ணனைக் கேட்டார்.
பகவான் கிருஷ்ணர் சிரித்துக்கொன்டே, " நண்பனே உத்தவா! விவேகம் உள்ளவனே வெற்றி பெறுகிறான். இது இந்த உலகத்தின் சட்டம். துரியோதனன் தருமனைக் காட்டிலும் விவேகமாக செயல்பட்டதால் அவன் சூதில் வெற்றி பெற்றான். தருமர் தோற்றார்."
உத்தவர் குழப்பத்துடன் கிருஷ்ணரை பார்க்க, கிருஷ்ணர், "துரியோதனன் சூதாட்டத்திற்கு நிறைய பணம் மற்றும் செல்வத்தை வைத்திருந்த போதிலும், பகடை விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பது அவனுக்குத் தெரியாது. அதனால்தான் அவன் தனக்குப் பதில் தனது மாமா சகுனியை விளையாடச் சொன்னான். அதுதான் விவேகம். தருமரும் இதேபோல் தனக்குப் பதில் என்னை விளையாடி இருக்கச் செய்திருக்கலாம். நானும் சகுனியும் பகடை விளையாடி இருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள் என்று நீ நினைக்கிறாய்? நான் கேட்கும் எண்களை சகுனியால் உருட்ட இயலுமா? அல்லது அவன் கேட்கும் எண்களை என்னால் உருட்ட இயலாதா? இதை விடு. அவர் விளையாட்டில் என்னை சேர்க்க மறந்துவிட்டார் என்ற உண்மையை நான் மன்னிக்க முடியும். ஆனால், விவேகம் இல்லாமல் அவர் மற்றொரு தவறு செய்தார். அவர் விதியால் தான் இந்த விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயம் என்பது எனக்குத் தெரியக்கூடாது எனவும் நான் சபைக்கு வரக்கூடாது என்றும் வேண்டினார்.அவர் தனது பிராத்தனைகளால் என்னை கட்டி, என்னை சபையில் அனுமதிக்கவில்லை; யாராவது தங்கள் பிரார்த்தனை மூலம் என்னை அழைப்பதற்காக நான் சபைக்கு வெளியில் காத்திருந்தேன். பீமன், அர்ஜூனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரும் கூட தோற்றிருந்தாலும், அவர்கள் துரியோதனனை சபித்து, தங்கள் விதியைக் எண்ணிக் குமுறினர். அவர்கள் என்னை அழைக்க மறந்துவிட்டார்கள். திரௌபதி கூட, துச்சாதனன் தனது சகோதரனின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அவளது கூந்தலைப் பிடித்து இழுத்து வரும்போது அழைக்கவில்லை. அவள் முடிந்தவரையில் சபையில் வந்திட்டாள். அவள் என்னை அழைக்கவில்லை. இறுதியாக நல்ல உணர்வு நிலவியது; துச்சாதனன் அவளது துகிலுரியும் பொழுது, அவள் தனது சொந்த பலத்தை கைவிட்டு " அபயம் கிருஷ்ணா! அபயம்!" என அழைத்தாள். அதன்பிறகு அவளது மானத்தைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அழைக்கப்பட்ட உடனேயே நான் அங்கு சென்றடைந்தேன். இந்த சூழ்நிலையில் என் தவறு என்ன?" என்று வினவினார்.
'அற்புதமான விளக்கம், கண்ணா, நான் ஈர்க்கப்பட்டேன். எனினும், நான் ஏமாற்றப்படவில்லை. நான் இன்னொரு கேள்வியை கேட்கலாமா? ' என்று உத்தவர் கேட்க கிருஷ்ணன் சிரித்துக்கொன்டே அனுமதி அளிக்கிறார்.
'அழைத்தால் மட்டுமே நீ வருவாய் என்று இதற்க்கு அர்த்தமா? நீ துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ, நீதியை நிலைநாட்டுவதற்கு தாமாக முன்வரமாட்டாயா? ' உத்தவர் கேட்கிறார்.
கிருஷ்ணன் புன்முறுவலுடன் 'இந்த உலகத்தில் எல்லோருடைய வாழ்வும் தங்கள் சொந்த கருமத்தை (கர்மா) அடிப்படையாகக் கொண்டது. நான் அதை இயக்கவில்லை; நான் அதில் தலையிட மாட்டேன். நான் ஒரு சாட்சி மட்டுமே. நான் உங்களிடம் நெருங்கி நிற்கிறேன், என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்கிறேன். இது கடவுளின் தர்மம் '. என்று கூறுகிறார்.
'ஓ... அப்படியானால் மிகவும் நல்லது கிருஷ்ணா!, நீ எங்களிடம் நெருங்கி இருந்து கொண்டே எங்கள் பாவச்செயல்களைக் கவனிப்பாய். நாங்கள் மேலும் மேலும் பாவச்செயல்களை செய்ய நீ பார்த்துக்கொண்டிருப்பாய்! நாங்கள் மேலும் மேலும் தவறுகளைச் செய்ய வேண்டும், பாவங்களைக் குவித்து, துன்பம் அடைய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்" என்று உத்தவர் கூறுகிறார்.
கிருஷ்ணர் கூறுகிறார். 'உத்தவா!, தயவு செய்து உன் வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை உணர். நான் உங்களின் சாட்சியாக நிற்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, உணர்ந்து கொண்டால், நீங்கள் எப்படி தவறான அல்லது கெட்ட செயலைச் செய்ய முடியும். நீங்கள் கண்டிப்பாக தவறான எதையும் செய்ய முடியாது. நீங்கள் இதை மறந்து, எனக்கு தெரியாமல் நீங்கள் காரியங்களை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள். அப்பொழுது தான் நீங்கள் பிரச்சனையில் சிக்குகிறீர்கள். தருமனின் அறியாமை, அவர் என் அறிவு இல்லாமல் சூதாட்டம் விளையாட முடியும் என்று இருந்தது. நான் சாட்சி வடிவில் எல்லோருடனும் எப்போதும் இருப்பதாக தருமன் உணர்ந்திருந்தால், அந்த விளையாட்டு வித்தியாசமாக முடிந்திருக்காதா? '
உத்தவர் பக்தி பரவசத்தில் மயங்கிய நிலையில் இருந்தார்.
'என்ன ஆழமான தத்துவம். எவ்வளவு பெரிய உண்மை! இறைவனின் மீதான நம்பிக்கை / பக்தி உணர்வு, இதை விட இறைவனை பூஜை செய்வதும், அவனுக்கு பணிவிடைகள் செய்வதும் கூட பெரிது இல்லை. அவனன்றி அணுவும் அசையாது என்று நாம் நம்ப துவங்குகிற பொழுது சாட்சி என்ற அவருடைய பிரசன்னத்தை நாம் எப்படி உணர முடியாது? இதை மறந்து எப்படி நாம் செயற்பட முடியும்?
கருத்துகள்