திருஞானசம்பந்தர் பாடல் பாடியுள்ள இத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 13 வது தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.
இறைவன் : ஸ்ரீ அரம்பேஸ்வரர், ஸ்ரீ தெய்வ நாகேஸ்வரர், ஸ்ரீ சந்திரசேகரர்
இறைவி : ஸ்ரீ கனக குஜாம்பிகை, ஸ்ரீ
கோடேந்து முலையம்மை .
கோடேந்து முலையம்மை .
அரம்பை வழிபட்டத் தலம்; அரம்பையங்கோட்டூர் என்பதே பிற்காலத்தில் மருவி இலம்பையங்கோட்டூர் என்றாயிற்று என்பர்.
ஞானசம்பந்தர் இப்பக்கத்தே வந்த பொழுது , இறைவன் ஒரு சிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்த, உடன் வந்த அடியார்கள் உணர்ந்து கொள்ளவில்லையாம். பின்பு வெள்ளைப் பசு வடிவில் வந்து ஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல, தலத்தினருகில் வந்ததும் பசு மறைந்ததாம். அப்போதுதான் இறைவனே வந்து வணர்த்தியதை உணர்ந்த ஞானசம்பந்தர் இத்திருக்கோயிலைத் தெரிந்து கொண்டு வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது
மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம் நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன் கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும் இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில் கொள்வதியல்பே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்