21. திருவிடைவாய்


இறைவன் : விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர்.
இறைவி : உமையம்மை, அபிராமி.

 
சோழ வள நாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 114 ஆவது ஸ்தலம் ஆகும். 

இத்தலம் 276ஆவது திருமுறைத்தலமாகக் கி. பி. 1917ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் இருந்ததாகவும், தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.



 மறியார் கரத்தெந்தையம் மாதுமையோடும் 
 பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர் 
 பொறிவாய் வரிவண்டு தன் பூம்பெடை புல்கி 
 வெறியார் மலரில் துயிலும்விடைவாயே..

- திருஞானசம்பந்தர்

கருத்துகள்