இறைவி : சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்.
சோழ வள நாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 97 ஆவது ஸ்தலம் ஆகும். இத்தலம் 214ஆவது திருமுறைத்தலமாகக் கருதப்படுகிறது.
இத்தலம் கூவிளவனம் (கூவிளம் - வில்வம்) என்னும் பெயருடையது. இதுவே பின்னாளில் மருவி கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று
திருஞானசம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும்போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் இல்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டனர். அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி "கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்" என்று தொடங்கும் பதிகம் பாடினார்.
இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும், அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞானசம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.
ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.
கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் நட்டம் ஆடிய நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்