தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 57 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 3 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.
இறைவன் - உச்சிநாதர், மத்யானேஸ்வரர்.
இறைவி - கனகாம்பிகை.
நெல்வயல்கள் மிகுந்து காணப்பட்ட தலம். திருநெல்வாயில் என்ற பெயர் கொண்டது. தற்போதைய பெயர் சிவபுரி. சிவபுரி மான்மியம் என்ற தலவரலாறு கொண்டது.
திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) சிவலோகத் தியாகேசர் கோயிலில் நடைபெறுகிறது. திருஞானசம்பந்தருடன் 20 அடியார் கூட்டமும் திருமணத்திற்கு செல்கிறது. அனைவரும் உச்சிப்பொழுதில் ஆலயத்தை அடைகின்றனர். அனைவருக்கும் உள்நின்று உடற்றும் பசி. கோயில் பணியாளர் வடிவில் வந்த ஈசன் அனைவருக்கும் உச்சிபொழுதில் அன்னமிட்டு மறைகிறார்! உச்சிப்பொழுதில் பசிப்பிணி போக்கியதால் இறைவன் உச்சிநாதர்! (மத்யானேஸ்வரர்.)
புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய மடையி னார்மணி நீர்நெல் வாயிலார் நடையில் நால்விரற் கோவ ணந்நயந் துடையி னாரெம துச்சி யாரே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்