33.திருமயேந்திரப்பள்ளி

தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 60 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 6 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.

இறைவன் - திருமேனியழகர், சோமசுந்தரர். 
இறைவி - வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை. 



சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது.

சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, "திருமேனி யழகர்' என்றும், அம்பாள் வடிவாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.  இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, "அழகர்' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ள பெருமாள் "சுந்தரராஜன்' என்று சமஸ்கிருதத்திலும், "அழகர்' என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் "அழகர்' என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.

இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி' என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.

 திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமுங் 
 கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும் 
 வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள் 
 அரவரை அழகனை அடியிணை பணிமினே 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்