தேவாரம் பாடப் பெற்ற ஸ்தலங்களில் 86 ஆவது ஸ்தலமும் மற்றும் காவிரி வடகரையில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலங்களில் 32 ஆவது ஸ்தலமும் இது ஆகும்.
இறைவன் - பதஞ்சலிநாதர்.
இறைவி - கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள்.
பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முரிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப் புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப் பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ் கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
- சுந்தரர்
கருத்துகள்