பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 10ஆவது பாடல் பெற்ற சிவத்தலம் மற்றும் 256ஆவது தேவார பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்..
இறைவன் : திருமேனிநாதர், சுழகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், பூமீஸ்வரர்.
இறைவி: துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை.
இரண்யாசுரனின் காற்று (ஸ்பரிசம்) பூமா தேவியின் மீது வீசியதால், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நீக்க பூமா தேவி வருடந்தோறும் மாசி மதம் மக நட்சத்திரத்தின் போது ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இதனால் ஈசனுக்கு பூமிநாதர் எனப்பெயர்.
கௌதமர் - அகலிகை தம்பதிகளுக்கு மார்கழி மதம் திருவாதிரையில் ஆனந்த தாண்டவமும், பங்குனி மாதத்தில் பூரா நட்சத்திரத்தில் திருக்கல்யாண கோலத்தில் (திருமேனி நாதர் - துணைமாலை) காட்சி கொடுத்தார். இதன் நினைவாக இங்கு வருடந்தோறும் பங்குனி மாதம் ப்ரஹ்மோத்சவம் நடைபெறுகிறது.
இத்தலத்தில் தவமியற்றிய நந்தியெம்பெருமானுக்கு அன்னை பார்வதி தேவி அருள் புரிந்து தனக்கு வாகனமாகவும் ஆசிர்வதித்த தலம்.
பாண்டிய மன்னன் பிருஹத் பாலனின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளப்பெருக்கை இறைவன் தன் திரிசூல முனையில் ஏந்தி காத்ததன் காரணமாக பிரளய விடங்கர் தனிச் சன்னதி அமைந்துள்ளது.
பாண்டிய மன்னன் சாக்ஷிசமன் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளப்பெருக்கை இறைவன் தன் திரிசூலத்தால் பூமியில் துவாரம் ஏற்படுத்தி தண்ணீரை வற்றச் செய்ததின் காரணமாக (திருச்)சுழியல் என்று பெயர் பெற்றது.
சுந்தரமூர்த்தி நாயனார் பக்கத்து ஊராகிய பள்ளிமடம் என்ற ஊரில் தங்கி மறுநாள் காலை ஆற்றில் நீராட இறங்கிய பொழுது எங்கும் சிவலிங்கமாக காட்சி அளித்ததால் அப்படியே தேவாரம் பாடிவிட்டுச் சென்றதாக வரலாறு.
ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும் வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின் தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல் நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.
- சுந்தரர்
கருத்துகள்