பாண்டிய நாட்டில் அமைந்துள்ள 8ஆவது பாடல் பெற்ற சிவத்தலம் மற்றும் 252ஆவது தேவார பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்..
இறைவன் : ராமநாதேஸ்வரர்.
இறைவி: மலைவளர்காதலி, பர்வதவர்த்தினி.
இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.
அலைவளர் தண்மதி யோடய லேயடக் கியுமை முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி இலைவளர் தாழைகள் விம்முகா னல்இரா மேச்சுரம் தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே.
- திருஞானசம்பந்தர்
பாசமுங் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க வாசமிக் கலர்கள் கொண்டு மதியினால் மால்செய் கோயில் நேசமிக் கன்பி னாலே நினைமின்நீர் நின்று நாளுந் தேசமிக் கான் இருந்த திருஇரா மேச்சு ரமே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்