இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 43 ஆவது பாடல் பெற்ற தலம். மேலும் இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று ஆகும்.
இறைவன் : வீரட்டேஸ்வரர்.
இறைவி: சிவானந்தவல்லி, பெரியநாயகி, பிருகந்நாயகி.
அந்தாகசூரன் எனும் அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடைபெறும் பொழுது அசுரனின் குருதியிலிருந்து அசுரர்கள் தோற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தடுப்பதற்காக சிவபெருமான் 64 பைரவர்களை உருவாக்கினார். அறியாமை எனும் இருளான அந்தாகசூரனை அழித்து சிவபெருமான் வீரட்டேஸ்வரராக மெய்ஞானத்தினை அருளிய தலம்.
படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண் இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள் விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.
- திருஞானசம்பந்தர்
செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறிய மாட்டேன் எத்தைநான் பற்றி நிற்கேன் இருளற நோக்க மாட்டாக் கொத்தையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.
- திருநாவுக்கரசர்
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான் கூழை ஏறுகந் தானிடங் கொண்டதுங் கோவலூர் தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம் வாழை காய்க் கும்வளர் மருகல் நாட்டு மருகலே.
- சுந்தரர்
கருத்துகள்