71. திருப்பூந்துருத்தி

இறைவன் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர்.

இறைவி : சௌந்தரநாயகி.




தேவாரம் பாடப் பெற்ற தலங்களில்  இது 128 ஆவது தலம் மற்றும் காவேரி வடகரையில் உள்ள சிவ தலங்களில் 11 ஆவது தலம்.


அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்று எண்ணி காலால் மிதிக்க அஞ்சி வெளியில் நின்ற சம்பந்தருக்கு நந்தியை விலகி நிற்குமாறு இறைவன் அருளிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). அப்பர் சம்பந்தரின் பல்லக்கைச் சுமந்த தலமெனப்படுகிறது. (பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறார்)   


நந்தி தேவர் திருமழபாடி என்ற ஊரில் ஊர்மிளா (எ) சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்த பொழுது, திருமணத்திற்கு சப்த தலங்களிலிருந்தும் ஏழு பொருட்கள் வந்ததாக வரலாறு.


திருப்பழனம் - பழங்கள் 

திருச்சோற்றுத்துறை - அன்னம்

திருவேதிகுடி - வேத விற்பன்னர்கள் 

திருக்கண்டியூர் - ஆபரணங்கள் 

திருப்பூந்துருத்தி - புஷ்பங்கள் 

திருநெய்தானம் - நெய்

கருவறையின் தென்பால் தென்கயிலையும், வடபால் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன. திருநாவுக்கரசர் திருவையாறில் கயிலாய கட்சி பெற்று இத்திருத்தலத்தில் மடம் துவங்கி பணி செய்தபொழுது திரும்பவும் அக்கயிலாய காட்சியைக் காண இறைவனிடம் வேண்ட அவரும் வட கயிலாய காட்சியை காட்டி அருளினார். ஆனால், நாவுக்கரசர் திருவையாறில் கண்ட தென்கயிலாய காட்சியை காண விரும்பியதும், தென் கயிலாய கட்சியையும் இறைவன் காட்டி அருளினார். எனவே இத்தலத்தில் வட கைலாயம், தென் கைலாயம் என இரண்டு சந்நிதிகள் உண்டு. வட கயிலத்தில் ஈசனும், நந்தியும் தனித்தனியே இருப்பதால் இங்கும் அவ்வாறே உள்ளனர். தென் கயிலாய காட்சியில் ஈசனும், அம்மையும் நந்தி வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தந்தனர். எனவே இந்த தென் கைலாய காட்சியில் நந்தி வாகனம் கிடையாது.  

மாலினை மாலுற நின்றான் 
  மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் 
  பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப் 
  பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை 
  நானடி போற்றுவதே.
- திருஞானசம்பந்தர்

 நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
	நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்
	பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
	வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
	வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்