இறைவன் : வேதபுரீசுவரர், வாழைமடுநாதர்.
இறைவி: மங்கையர்க்கரசி.
தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் இது 131 ஆவது தலம் மற்றும் காவேரி தென் கரையில் உள்ள சிவ தலங்களில் 14 ஆவது தலம். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. 'விழுதிகுடி' என்பது மருவி 'வேதிகுடி' ஆயிற்று என்பர் ஒருசாரார்.
திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்.
சநீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம் ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந் தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில் வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.
- திருஞானசம்பந்தர்
பகையது காலெரி நாகங் கனல்விடு சூலமது வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன் செய்யினில் நீல மணங்கம ழுந்திரு வேதிகுடி ஐயனை ஆரா அமுதினை நாமடைந் தாடுதுமே..
- திருநாவுக்கரசர்
கருத்துகள்