இறைவன் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்.
இறைவி: பாலாம்பிகை.

தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் இது 106 ஆவது தலம் மற்றும் காவேரி வட கரையில் உள்ள சிவ தலங்களில் 52 ஆவது தலம். இங்கு இறைவனுக்கு பசு நெய் அபிஷேகம் விசேஷமானது.
கல்வெட்டுக்களில் இத்தலம் "இராஜராஜ வளநாட்டு பைங்காநாட்டு திருநெய்த்தானம்" என்றும்; சுவாமியின் பெயர் நெய்த்தானமுடையார் என்றும் குறிக்கப்படுகிறது.
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
- திருஞானசம்பந்தர்
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென் மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயில் மேய நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்