தொண்டை நாட்டில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இது 21 ஆவது பாடல் பெற்ற தலம் ஆகும்.
இறைவன்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
இறைவி: ஜெகதாம்பிகை
பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது.
குருபகவானின் மகனான பரத்வாஜர், ஒரு சாபத்தினால் கருங்குருவியின்(வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்குப் பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து, பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் “திருவலிதாயம்” என்றும், சிவன் “வலியநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
குரு பகவான், தான் செய்த தவறால், தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த குரு பகவான், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.
பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கை புனல்தூவி
ஒத்த சொல்லி உல கத்தவர் தாம் தொழுது ஏத்த உயர் சென்னி
மத்தம் வைத்தபெரு மான்பிரியாது உறை கின்றவலி தாயம்
சித்தம்வைத்தஅடி யார் அவர்மேல் அடை யாமற்று இடர்நோயே..
கருத்துகள்