தொண்டை நாட்டில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இது 6 ஆவது பாடல் பெற்ற தலம் ஆகும்.
இறைவி: இறையார் வளையம்மை
வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதால் இத்தலம் குரங்கனில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது. இறைவனை வழிபடும் நிலையில் இம்மூன்றின் உருவங்களும் புடைப்புச் சிறபமாக ஆலயவாயிலில் அமைக்கப் பெற்றிருக்கின்றன. வாலி முதலிலும், பிறகு இந்திரனும், பினபு எமனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
தீர்த்தம் காக்கை தீர்த்தம் (காக்கை மடு). இது எமன் சிவபூஜை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய மடு என்பது ஐதீகம்.
விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்கும் கழுநீர் குவளைம்மல ரக்கயல் பாயும் கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம் தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.
- திருஞானசம்பந்தர்
செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந் தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந் தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும் நல்லூருந் தேவன் குடிமருகலும் நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங் கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக் கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே.
- திருநாவுக்கரசர்
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் சிந்தையூர் நன்றுசென்றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
- சுந்தரர்
கருத்துகள்