80. திருவன்பார்த்தன் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)

தொண்டை நாட்டில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இது 9 ஆவது பாடல் பெற்ற தலம் ஆகும். 


இறைவன்: தாலபுரீசுவரர் (அகத்தியர் வழிபட்டது - சுயம்பு.), கிருபாநாதேசுவரர் (புலஸ்தியர் வழிபட்டது

இறைவி: அமிர்தவல்லி (அகத்தியர் வழிபட்டது.), கிருபாநாயகி (புலஸ்தியர் வழிபட்டது).





தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன.  


அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.


அகத்தியர் பூசித்தபோது, கோட்டை முனீஸ்வரர் பனைக் கனிகளை உதிரச் செய்ய, அகத்தியர் அதையும் இறைவனுக்கு படைத்தமையால், பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார். 


    விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
    அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறிவொண்ணா
    மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
    சடையிற்கங்க தரித்தானைச் சாராதார் சார்பென்னே.
- சுந்தரர்

கருத்துகள்