82. திருவக்கரை

இது தொண்டைநாட்டின் 30 வது தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலம்.  

இறைவர்: சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர். 
இறைவி: அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை. 




குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவன் சிவ பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து வரம் பல பெற்றான். அதனால் செருக்கடைந்த அவன் தேவர்களை துன்புறுத்தலானான். தேவர்கள் அவனையழிக்க, சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் காளியை அழைத்து அப்பணியை ஒப்படைத்தார். காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது. வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள்.காளி வக்ராசுரனின் சகோதரி துன்முகியை அழித்தார். துன்முகி கர்ப்பமாக இருந்ததால், குழந்தையை வயிற்றில் இருந்து வெளியே இழுத்து, வலது காதில் காது வளையமாக அணிந்தாள். காளி வக்ராசுரனின் சகோதரியை வதம் செய்ததால், அவள் வக்ரகாளி என்றும், அந்த இடம் திருவக்கரை என்றும் அழைக்கப்பட்டது. ஆதி சங்கரர் தனது இடது காலில் ஸ்ரீசக்ரத்தை நிறுவி கோபத்தை தணித்ததாக நம்பப்படுகிறது. இத்தலம் வக்ர சாந்தி திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.

கறையணி மாமிடற்றான்
  கரிகாடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினான்
  ஒருபாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் தன்றலையிற்
  பலிகொள்பவன் வக்கரையில்
உறைபவன் எங்கள்பிரான்
  ஒலியார்கழல் உள்குதுமே.

- திருஞானசம்பந்தர் 

 கச்சைசேர் அரவர் போலுங் 
  கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும் 
  பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி 
  இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும் 
  நாகஈச் சரவ னாரே.

- திருநாவுக்கரசர்


கருத்துகள்