தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் 32 -இல் 11 ஆவது தலம்.
இறைவன் : மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர், தீண்டச் சிவந்தார், சாகிசனர்.
இறைவி : அஞ்சனாட்சி, கருணாம்பிகை.
திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஆதலின் 'மாற்பேறு ' என்னும் பெயர் பெற்றது.
மகாவிஷ்ணு ஒருமுறை குபன் என்ற அரசனுக்காக ததீசி முனிவருடன் போரிட்டார். அப்போது மகாவிஷணுவின் சக்கரம் முனிவரின் வைர உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. சலந்திரனை சம்ஹாரம் செய்த சக்கரம் சிவபெருமானிடம் இருப்பதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணு அதனை பெறவேண்டி இத்தலம் வந்து அம்பிகை பூசித்த இலிங்கத்தை தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து வந்தார். சிவபெருமான் அவரது பக்தியைப் பரிசோதிக்க வேண்டி ஒரு நாள் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தருளினார். திருமால் ஆயிரம் பெயர்களால் இறைவனை அருச்சிக்கும் போது ஒரு பெயருக்கு மலர் இல்லாமையால் தனது கண்ணைப் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். உடன் சிவபெருமான் மகிழ்ந்து மகாவிஷ்ணுவிற்கு காட்சி கொடுத்து அவர் வேண்டியபடி சக்கரத்தைக் கொடுத்தருளினார். திருமால் வழிபட்டு சக்கராயுதம் பெற்றதால் இத்தலம் அன்று முதல் திருமாற்பேறு என்று பெயர் பெற்றது. இன்று பெயர் மருவி திருமால்பூர் என்று வழங்குகிறது.
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறி லாமணி கண்டரே.
மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர் பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.
கருத்துகள்