தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 186 ஆவது தலமும், காவிரி தென் கரையில் உள்ள 69 ஆவது தலம் ஆகும்.
இறைவன் : கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர், சற்குணலிங்கேஸ்வரர்.
இறைவி : அத்வைதநாயகி, கல்யாணநாயகி, சர்வாலங்காரநாயகி
வனவாசத்தின் போது ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் சில காலம் இங்கு தங்கினார். பூஜை செய்வதற்காக, காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வரும்படி ராமர் அனுமனிடம் கேட்டார். தாமதம் ஆனதாலும், பூஜை நேரம் முடியப் போவதாலும் ராமர் மணலில் சிவலிங்கம் செய்து பூஜையை முடித்தார். மூலவர் மீது விரல் பதியங்கள் இன்னும் காணப்படுகின்றன. பின்னர் அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் பிரகாரத்தில் நிறுவப்பட்டு ஹனுமந்த லிங்கம் என்று அழைக்கப்பட்டது.
வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர் மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன் காதியல் குழையினன் கருக்கு டியமர் ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்