தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 187 ஆவது தலமும், காவிரி தென் கரையில் உள்ள 70 ஆவது தலம் ஆகும்.
இறைவன் : ஸ்ரீவாஞ்சியநாதர்.
இறைவி : வாழவந்தநாயகி, மங்களநாயகி
தென்னிந்தியாவில் காவிரிக்கரையில் காசிக்கொத்த ஆறு தலங்களில் ஸ்ரீ வாஞ்சியமும் ஒன்று. [திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், ஸ்ரீ வாஞ்சியம்]
திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது.
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடை யிற்பொலி வித்தபு ராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.
- திருஞானசம்பந்தர்
படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள் உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம் புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
- திருநாவுக்கரசர்
பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடு மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள் திருவ னார்பணிந் தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஒருவ னார்அடி யாரை ஊழ்வினை நலிய வொட்டாரே.
- சுந்தரர்
கருத்துகள்