தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 188 ஆவது தலமும், காவிரி தென் கரையில் உள்ள 71 ஆவது தலம் ஆகும்.
இறைவன் : மதுவனேஸ்வரர், பிரகாசநாதர், தேவாரண்யேசுவரர்.
இறைவி : மதுவனேஸ்வரி, தேவகாந்தார நாயகி.
விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாய் மாறியிருந்து வழிபட்ட தலமாதலின் மதுவனம் என்றும் பெயர் பெற்றது.
தண்ணியல் வெம்மையி னான்றலை யிற்கடை தோறும்பலி பண்ணியல் மென்மொழி யார்இடக்* கொண்டுழல் பண்டரங்கன் புண்ணிய நான்மறை யோர்முறை யாலடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத் துப்பெருங் கோயில் நயந்தவனே.
- சுந்தரர்
கருத்துகள்