97. திருமாணிகுழி

நடு நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் 17ஆவது  சிவ ஆலயமும், தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 49ஆவது தலம் ஆகும். 


இறைவன் : வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர்.  

இறைவி: அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி. 





முன்னொரு காலத்தில் கர்பகிரகத்திலே அணையவிருந்த தீபத்தை ஒரு எலியானது பசியின் காரணமாக விளக்கில் இருந்த நெய்யை உண்ணும் பொழுது திரியானது தூண்டப்பெற்று விளக்கு பிரகாசமாக எரிந்தது. இதைக்கண்ட இறைவன் அந்த எலிக்கு மோட்சம் கொடுத்து மாரு பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார். அந்த எலி தான் மறு பிறவியில் கேரள தேசத்தில் பிரகலாதனின் கொள்ளுப்பேரனாகிய மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தது.  ஒரு நாள் அசுரர் குருவான சுக்கிராச்சாரியார் மகா பலிக்கு தேவ லோக பதவி கிடைப்பதற்காக அசுவமேத யாகம் செய்யச் சொன்னார். இந்த யாகத்தை தடுத்து நிறுத்த மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகா பலியிடம் மூன்றடி இடம் தவமிருப்பதற்காக வேண்டினார்.  வந்திருப்பது மஹாவிஷ்ணு என்பதை அறிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், மகா பலியிடம் தானம் தந்து விட்டால் யாகம் பூர்த்தியடையாது என எச்சரிக்கிறார். ஆனால் மகா பலியோ, வந்திருப்பது மகாவிஷ்ணுவே ஆனாலும் அவர் யாசகர் வடிவில் யாசகம் கேட்டு வந்திருக்கிறார். யாசகம் தர வில்லையெனில், யாகம் நிறைவடையாது எனக்கூறி கிண்டியில் இருந்த நீரை ஊற்றி தாரை வார்க்க முற்பட்டார். அப்பொழுது  சுக்கிராச்சாரியார் ஒரு வண்டின் வடிவம் தாங்கி, கெண்டியில் சென்று அடைத்துக்கொண்டார்.  அப்பொழுது மஹாவிஷ்ணு ஒரு தர்பை புல்லினால் கெண்டியின் துவாரத்தை குத்த, சுக்கிராச்சாரியார்க்கு இடது கண் பறிபோனது. மகா பலிச்சக்கரவர்த்தியும் வாமனார்க்கு மூன்றடி இடத்தை தானமாக வழங்க தாரை வார்த்தார்.  அப்பொழுது மகா விஷ்ணு விஸ்வரூபம் கொண்டு, விண்ணையும், மண்ணையும் ஈரடியால் அளந்தார்.  மூன்றாவது அடிக்கு மஹாபலிச் சக்கரவர்த்தியின் தலைமேல் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார். 

இதனால் மஹாவிஷ்ணுவிற்கு ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய விஷ்ணு வாமன வடிவிலேயே இறைவனை வணங்கி வழிபாடு செய்தார். அப்பொழுது இறைவன் அடிமுடி காட்டாமல் விண்ணும், மண்ணும் நிறைந்து காட்சி அளித்தார். இந்த விஸ்வரூப காட்சியை கண்ட மஹாவிஷ்ணு, 'சுவாமி, நானோ குள்ள ரூபம், வாமன அவதாரம். நீரோ விண்ணும் மண்ணும் நிறைந்து காட்சி அளித்தால் என்னால் தங்களை காண இயலாது. ஆகையால் எனக்கு அனுக்கிரஹம் செய்யவேண்டும் என மனமுருக வேண்டினார். இதைக்கண்ட சிவபெருமான் சிறிய ரூபம் கொண்டு ஒரு குழிக்குள் அமர்த்ததாக வரலாறு. ஆகையால் இவ்வூருக்கு உதவிமாணிகுழி எனப் பெயர் பெற்றது. கருவறையிலேயே விஷ்ணு வாமன ரூபத்தில் சிவ பெருமானை பூஜிப்பதால் ஈஸ்வரன், வாமனபுரீஸ்வரர் என அழைக்கப்பெறுகிறார். இந்த பூஜைக்கு தடை ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக, சிவபெருமான் ருத்திரனை காவலாக வைத்திருந்தார். ஆகவே, இன்றும் முதலில் ஆராதனை இந்த திரைசீலை வடிவில் இருக்கும் குபேர ருத்திர மூர்த்திக்கே நடைபெறும். 

இத்தல இறைவன் திரைக்குள்ளேயே இருப்பதால், தேவர்களும் முனிவர்களும் இறைவனை தரிசிக்க முடியாமல் வருந்தினர். இதனைக் கண்ட அகத்திய முனிவர், ஆலயத்திற்கு எதிப்புறம் இருக்க கூடிய புஷ்பகிரி மலையிலே நீண்ட காலம் தவமிருந்து இறைவன் அனைவருக்கும் இரண்டு நிமிடமாவது தரிசனம் தர வேண்டும் என வரம் பெற்றார். 

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு
  பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
  வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள
  வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
  சேருதவி மாணிகுழியே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்