தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 48 ஆவது தலமும், நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 16 ஆவது தலம் ஆகும்.
இறைவன்: வடுகீஸ்வரர், வடுகநாதர், வடுகூர்நாதர்
இறைவி: திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி
அஷ்டபைரவர்களுள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்ட தலமாதலின்; வடுகர் வழிபட்டது வடுகூர் என்று பெயர் பெற்றது.
சுடுகூர் எரிமாலை அணிவர் சுடர்வேலர் கொடுகூர் மழுவாள் ஒன்று உடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமம் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூர் அடிகளே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்