101. திருவாமாத்தூர்

தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 53 ஆவது தலமும், நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 21 ஆவது தலம் ஆகும்.








இறைவன்: அழகியநாதர், அபிராமேச்வரர், ஆமாதீஸ்வரர்

இறைவி: முத்தாம்பிகை, அழகிய நாயகி 

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. 


குன்றவார் சிலை நாணராவரி வாளிகூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடையேறும் வேதியனே
தென்றலார்மணி மாடமாளிகை குளிகைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்தனையும் ஆமாத்தூர் அம்மானே
- திருஞானசம்பந்தர்

மாமத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியும் காண்கிலர் தாள் முடி
ஆமாத் தூர்அர னேஅரு ளாய் என்றென்று
ஏமாப்பு எய்திக்கண்டார் இறை யானையே.
- திருநாவுக்கரசர்

பொன்னவன் பொன்னவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்
கண்ணவன் கண்ணவன் காண்டும்என் பாரவர் தங்கட்குப்
பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூர்எம் அடிகளே.
- சுந்தரர்

கருத்துகள்