தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 45 ஆவது தலமும், நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 13 ஆவது தலம் ஆகும்.
இறைவன்: மருதீஸ்வரர், இடையாற்றீசர்.
இறைவி: ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி.
கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.
முந்தையூர் முதுகுன்றங்குரங்கணின் முட்டம் சிந்தையூர் நன்றுசென்றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறுபழனம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
- சுந்தரர்
கருத்துகள்