106. திருநல்லம் (கோனேரி ராஜபுரம்)





தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 151 ஆவது தலமும்சோழ நாடு காவிரி தென்கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 34 ஆவது தலம் ஆகும்

இறைவன்: உமா மஹேஸ்வரர்மாமனி ஈஸ்வரர்பூமீஸ்வரர்பூமிநாதர்.

இறைவி: தேகசௌந்தரிஅங்கவளநாயகிமங்கள நாயகி. 


முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்றளிக் கோவில் ஆக்கிய பெருமை கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். இத்தலத்தில் நடராஜர் திரு உருவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் சுயம்புவாக இத்தலத்தில் காட்சி தருகிறார். இந்த செப்புச் சிலை நடராஜர் சுமார் 9 அடி உயரம் உள்ளவர்.


இங்கு இறைவன் (வைத்தியநாதர்), புரூரவமன்னனின் குட்டநோயைத் தீர்த்ததாக சொல்லப்படுகிறது.

நிலவுமாளிகை திருநல்லம் நீடுமாமணியை
இலகுசேவடி இறைஞ்சி இன்தமிழ்கொடு துதித்துப்
பலவும் ஈசர்தம் திருப்பதி பணிந்து செல்பவர்தாம்
அலைபுனல் திருவழுந்தூர் மாடக்கோயில் அடைந்தார். 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்