119. சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)





தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 134 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 17ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  சக்கரவாகேஸ்வரர்.

இறைவி: தேவநாயகி.

சக்கரவாகப்பறவை தவமிருந்து இறைவனைப் பூஜித்தபடியால், சுவாமிக்கு சக்ரவாகீச்வரர் என்றும் தலத்திற்கு சக்கரப்பள்ளி என்றும் பெயர்கள் வந்தன. கோவில் சுவற்றில் ஈசனை சக்கரவாகப்பறவை பூஜிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமுடியைத்தேடி பிரமன் சக்கரவாகப் பறவையாக வடிவெடுத்துப் பறந்து சென்றும் காணமுடியவில்லை.தன் பிழைக்கு வருந்தி பிரமன் பூசித்துப் பழி நீங்கியதாக வரலாறு.
படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்