120. திருப்பாலைத்துறை









தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 136 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 19ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்.

இறைவி: தவளவெண்ணகையாள்.

தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து, புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம்.

விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத்துறையாரே.
நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு வேந்திச் சுடர்முடிப்
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே. 
- திருநாவுக்கரசர்

கருத்துகள்