122. திருப்பெரும்புலியூர்






தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 107 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  வியாக்ரபுரீஸ்வரர், பிரியாநாதர்.
இறைவி: சௌந்தரநாயகி.

பஞ்ச புலியூர்த்தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) எருக்கத்தம்புலியூர், 4) ஓமாம்புலியூர்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வியாக்ரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும்.
மண்ணுமோர் பாகம் உடையார் மாலுமோர் பாகம் உடையார்
விண்ணுமோர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர்
கண்ணுமோர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்