123. திருப்பழுவூர்




தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 109 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 55ஆவது சிவத்தலமாகும்.  

இறைவன்:  வட மூலநாதர்(வடம்-ஆலமரம்), யோகவனேஸ்வரர்,ஆலந்துறையார்.

இறைவி: அருந்தவ நாயகி.

பழு என்னும் சொல் ஆலமரத்தைக் குறிக்கும். இங்கே தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது.

பரசுராமர், தந்தை உத்தரவிட்டதின் பேரில் தன் தாயைக் கொன்ற பழிதீரும் பொருட்டு வழிபட்ட தலம் இதுவாகும்.
முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்	
அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்