தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 66 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 12ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: ஆரண்யசுந்தரேஸ்வரர்.
இறைவி: அகிலாண்டநாயகி.
பிரம்மனால் படைக்கப்பெற்ற விருத்தாசுரன் என்னும் அசுரனை ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் அசுரனை அழித்தான். அதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அதைப் போக்கிக் கொள்ள பிரம்மாவின் வழிகாட்டுதல் படி இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவம் செய்து வழிபட்டு பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்று மீண்டும் இந்திர பதவியைப் பெற்றான் என தலபுராணம் சொல்கிறது.
பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணிஏத்த மறையுடையான் மழுவாள் உடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட கறையுடையான் கனலாடு கண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக் குறையுடையான் குறட் பூதச்செல்வன் குரைகழலே கைகள் கூப்பினோமே
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்