தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 63 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 9ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்.
இறைவி: குயிலினும் நன்மொழியம்மை.
இயற்பகை நாயனார் வழிபட்டு முத்திப் பெற்றத் தலம். இயற்பகை நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
தேவேந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்து இறைவனை பூஜித்தாள். தேவலோகத்தில் தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். தனது தாய் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில் இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். அப்போது அம்பாள் பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். எனவே தான் அம்மனுக்கு குயிலினும் இனிமொழியம்மை என்ற திருநாமம் ஏற்பட்டது. இறைவன் சாயாவனேஸ்வரர் தோன்றி இந்திரனிடம் இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை விட்டுவிடும் படியும், இங்கேயே தனது அன்னையுடம் இங்கே வந்து வழிபட்டு நலமடையும் படியும் கூறினார். ஐராவதம் கோவிலை இழுத்துச் செலவதற்காக பூமியை தன் கொம்புகளால் கீறியதால் உண்டான இடத்திலுள்ள தீர்த்தமே கோவிலுக்கு எதிரில் உள்ள ஐராவத தீர்த்தம்.
நித்தலுந் நியமஞ்செய்துநீர் மலர்தூவிச் சித்தமொன் றவல்லார்க்கருளுஞ் சிவன்கோயில் மத்தயா னையின்கோடும்வண்பீ லியும்வாரி தத்துநீர்ப் பொன்னிசாகரமேவு சாய்க்காடே.
- திருஞானசம்பந்தர்
தோடுலா மலர்கள் தூவித் தொடுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவி னாரே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்