136. திருப்புறவார்பனங்காட்டூர் (பனையபுரம்)

இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  52ஆவது தலமும்,  நடு நாட்டுத்தலங்களில் 20ஆவது சிவத்தலமாகும். 






இறைவன் :   பனங்காட்டீசர்.  

இறைவி : புறவம்மை, சத்யாம்பிகை.

சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும்.. சிவபெருமானை நிந்தித்துத் தக்ஷன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். 

விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழவெங்கணை யாலெய் தாய்விரி
பண்ணமர்ந்தொலி சேர் புறவார் பனங்காட்டூர்ப்
பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகாபிறை சேர்நுதலிடைக்
கண்ணமர்ந் தவனே கலந்தார்க்கு அருளாயே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்