இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 276ஆவது தலமும், நடு நாட்டுத்தலங்களில் 33ஆவது சிவத்தலமாகும்.
நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவதலங்கில் 23 ஆவதாக உள்ள இத்தலம் அகஸ்திய முனிவரால் பூஜிக்கப்பட்ட ஒரு தலமாகும். இறைவன் அகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் நந்திகேஸ்வரர் இறைவி அகிலாண்டேஸ்வரியை மஹாசிவராத்திரி அன்று வழிபடுவதாக ஐதீகம். சுகப்ரஹ்ம மகரிஷி வயிற்று வலி நீங்க வழிபட்ட ஸ்தலம். ஆதிஷேஷனும் இத்தல இறைவனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
பன்னி நின்ற பனுவல் அகத்தியன் உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன் மன்னை நாகம் முகத்தவர் ஓதலும் முன்னில் நின்ற கிளியன்ன வூரனே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்