142. தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)







தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  148ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 31ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்: ஆபத்சகாயேஸ்வரர்

இறைவி: பவளக்கொடி அம்மை

காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளதாலும், இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும் இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர் பெற்றது.
பரவக்கெடும் வல்வினை பாரிடம் சூழ
இரவிற் புறங் காட்டிடை நின் நெறி யாடி
அரவச் சடை அந்தணன் மேய அழகார்
குரவப் பொழில் சூழ்குரங் காடுதுறையே. 
- திருஞானசம்பந்தர்

இரங்கா வன்மனத் தார்க் ளியங்குமுப்
புரங்கா வல்அழி யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்காடு துறைக் கோலக்க பாலியே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்