தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 97ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 43ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: யோகானந்தீஸ்வரர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேசுவரர்.
இறைவி: சாந்தநாயகி, சௌந்தரநாயகி.
இத்தலத்தில் விளங்கும் சிவபெருமானுக்கு யுகத்திற்கு ஒரு பெயருண்டு. கிருத யுகத்தில் புராதனன் எனும் அசுரனை வதைத்ததால் இவ்வூரின் பெயர் புராதனபுரம் என்றும் சுவாமியின் பெயர் புராதனேஸ்வரர் என்றும் வழங்கப்பெற்றது. திரேதா யுகத்தில் இவ்வூரைச் சுற்றி வில்வ வனமாக இருந்ததால் ஊரின் பெயர் வில்வாரண்யபுரம், சுவாமியின் பெயர் வில்வ ஆரண்யேஸ்வரர் என்றும், துவாபர யுகத்தில் நந்தியை ஆட்கொண்டதால் யோகநந்தீஸ்வரர் என்றும் வழங்கப்பெற்றது. கலியுகத்தில் விஷ்ணுஷர்மா என்ற யோகி இங்கு தனது ஐந்து சகோதரர்களுடன் கடும் தவம் புரிந்து வந்தார். இவர்களது தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் யோகி வடிவில் காட்சி அளித்து, ஆறு யோகிகளுடன் தானும் சேர்ந்து ஏழு யோகியுடன் லிங்கத் திருமேனியில் ஐக்கியம் அடைந்தார்கள். இதான் ஆதாரமாக லிங்கத்தில் பின்புறம் ஏழு ஜடாமுடி இன்றும் உள்ளது. யோகிகளை தன்னகத்தையே கொண்டதால் சிவயோகிநாதர் எனும் பெயர் பெற்றார்..
இவ்வூரில் வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவரது ஆயுளை பறிக்க யமன் வந்ததாகவும், அப்பொழுது அவர் சிவயோகிநாதரை நோக்கி சிவயோகிநாதா என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள் என்று ஓடி வருகிறார். சிவயோகிநாதரும் தன்னிடம் அபயம் கேட்டு வரும் செல்வந்தரைக் காக்கும் பொருட்டு, நந்தி என்னவென்று பார் என்று கட்டளை இடுகிறார். நந்தி தேவரும் யமனுடன் கடும் சண்டையிட்டு தோல்வியடையச் செய்கிறார். யமனை ரிஷபம் வென்றதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இக்கோயில் முக்கிய தலமாக விளங்குகிறது.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகிய ராஜ ராஜ சோழன் தனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டி இக்கோயிலை புணரமைத்து'கோ ஹிரண்ய கர்ப்பம்' எனும் யுகாதி நடத்தினார். கோ என்றல் பசு. ஹிரண்யம் என்றால் தங்கம். கர்ப்பம் என்றால் கரு. தங்கத்தால் ஆன பசுவை செய்து, அப்பசுவின் வாய் வழியே சென்று பசுவின் கருவில் ராஜ ராஜ சோழன் மற்றும் அவர் மனைவி இருவருமே குழந்தை போல் பாவித்து பின் (பீஜம்) வழியாக வெளி வந்து இந்த பரிகாரத்தை செய்தனர். இதன் பின்னர் தான் ராஜேந்திர சோழன் பிறந்தான் என்பது வரலாறு.
குரவம் கமழ் நறுமென்குழல் அரிவை அவள்வெருவப் பொரு வெங்கரி படவென்றதன் அரிவை உடல் அணிவோன் அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும் விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்