144. திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  96ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 42ஆவது சிவத்தலமாகும். 





இறைவன்:  கர்க்கடகேஸ்வரர் (கர்க்கடகம் - நண்டு).

இறைவி:  அருமருந்தம்மை, அபூர்வநாயகி.

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு வந்த கந்தர்வன் ஒருவன் துர்வாசர் சிவபூஜை செயுது கொண்டு இருந்ததை பரிகாசம் செய்தான். துர்வாசர் கோபம் கொண்டு சிவபூஜையை பரிகசித்த நீ  நண்டாகக் கடவாய் என்று சாபமிட்டார். கந்தர்வன் பயம் கொண்டு துர்வாசரிடம் சாப விமோசனம் கேட்டான். அதற்கு துர்வாசர் அவனை பூலோகத்தில் திருந்துதேவன்குடி தலத்தில் அகழியில் பூக்கும் தாமரை மலர் கொண்டு ஒரு மண்டலம் சிவபூஜை செய்து வந்தால் விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். நண்டு வடிவில் இருந்த கந்தர்வனும் அவ்வாறே சிவபூஜை செய்து வந்தான். தேவேந்திரனும் அதே சமயம் அசுரர்களை அழிக்கும் வரம் வேண்டி இங்கிருந்த புஷ்காரணியில் 1008 தாமரை மலரை பறித்து இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். நண்டைக் கொல்ல முயன்றான். நண்டைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்த, நண்டு உருவிலுள்ள கந்தர்வன் அதனுள் புகுந்து சாப விமோசனம் பெற்றான்.  இந்திரனும் தன் தவறை உணர்ந்து பாப விமோசனம் வேண்டவே, இறைவன் மீண்டும் ஒரு மணடலம் பூஜை செய்ய ஆணையிட்டார். இந்திரனும் அவ்வாரே செய்து மீண்டும் இந்திரா பதவி அடைந்தான்


முன்பொரு காலத்தில் உறையூரில் வாழ்ந்து வந்த சோழ அரசன் ஒருவன் பக்கவாத நோயால் பாதிக்கப்பெற்றான்.  அரண்மனை மருத்துவர்கள் எவ்வளோவோ முயன்றும் முடியவில்லை. ஒரு நாள் தேவதேவசனார் மருத்துவராகவும் பார்வதி தேவியார் மருத்துவரின் மனைவியாகவும் அரசனது அரண்மனைக்கு வந்தார்கள். அவர் தமது விபூதி பையை அவிழ்த்து விபூதியை எடுத்து சோழனது நெற்றியில் பூசினார். சிறிதளவு விபூதியை தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்தார். பிறகு ஒரு ருத்திராக்ஷத்தை பட்டுக் கயிற்றில் கட்டி மகாராஜாவின் கழுத்தில் கட்டி விட்டார். நான் நாளை வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார். மறு நாள் பொழுது விடிந்ததும் மகாராஜன் தானாகவே படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தார்.  மறுநாள் அந்த மருத்துவரும், அவரது மனைவியும் அரண்மனைக்கு வந்து அரசரிடம் மருத்துவத்தை ஆரம்பிக்கலாமா என வினவினார். அதற்கு அரசன், மருத்துவரே நீங்கள் பூசி விட்ட திருநீறும், கட்டிவிட்ட ருத்திராக்ஷமும் நோயை நீக்கி விட்டன. இதற்க்கு மேல் மருந்தும் வேண்டுமோ என மருத்துவரை வினவினார். மேலும் மருத்துவரை நோக்கி தங்களுக்கு சன்மானம் அளிக்க விரும்புகிறேன். தாங்கள் எதைக் கேட்டாலும் தர சித்தமாயிருக்கிறேன் என்றான்,. மருத்துவரும், காவேரியின் வடகரையில் எங்கள் ஊர் இருக்கிறது. அங்கு பெரிய வெள்ளம் வந்து அங்கு உள்ள சிவாலயம் மண் மூடி இருக்கிறது. அந்த மண் மேட்டை அகற்றி, சிவாலய திருப்பணி செய்ய வேண்டும். அதுதான் நீ தரவேண்டிய சன்மானம் என்றார்.மஹாராஜாவும் மண் மேட்டை அகற்றி மறைந்த கோயிலை வெளிப்படுத்தவும் மருத்துவர் மறைந்தார்.   மருத்துவராக வந்து நோயை தீர்த்தவர் இத்தலத்து இறைவன் தான் என்பதை அறிந்த மன்னனும் இன்ப அதிர்ச்சி அடைந்தான்,. பின் ஆயிரக்கணக்கான ஆட்களை கொண்டு திருப்பணி செய்த போது, சுயம்பு சிவலிங்கத்தைக் கண்டான், அம்மன் சிலை கிடைக்காததால் புதிதாக செய்த சிலைக்கு அருமருந்தம்மை என்றும், சுவாமிக்கு அருமருத்துடையார் எனவும் பெயர் சூட்டினான். சில ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலை சுற்றி உள்ள நிலத்தை உழுத போது, மண்ணில் புதைந்திருந்த சிலை கிடைத்தது, சோழ மன்னனும் புதிதாக கிடைத்த சிலைக்கு அபூர்வ நாயகி எனப் பெயர் சூட்டினான்.

 மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள் இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்