151. திருவிசயமங்கை

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  101ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்: விஜயநாதர்.

இறைவி: மங்களாம்பிகை, மங்கைநாயகி.  




பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடக்கப் போகும் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் பெற விரும்புகிறான்.  பகவான் கிருஷ்ணரின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் இருந்து பாசுபதாஸ்திரம் பெற அர்ஜுனன் இத்தலத்தில் ஈசனை நோக்கி தவம் செய்தான்.  அர்ஜுனனின் தவத்தை கலைக்க அப்பொழுது ஒரு காட்டுப்பன்றி ஒன்று முயல, தன்னத் தாக்க வந்த அதே பன்றியின் மீது அர்ஜுனன்  அம்பு எய்தான். சிவ பெருமானும் ஒரு வேடுவர் வடிவத்தில் தோன்றி, அப்பன்றியின் மீது அம்பு எய்தார்.  பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வந்திருப்பது ஈசனே என்பதை உணர்ந்தான் அர்ஜுனன். சிவபெருமான் அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரம் அளித்து மறைந்தார். அர்ஜுனன் (விஜயன்) ஈசனை பூஜித்த தலமாதலால் இத்தலம் திருவிஜயமங்கை என்று பெயர் பெற்றது.
மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே. 
- திருஞானசம்பந்தர்

குசையும் அங்கையிற்
  கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல
  வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந்
  தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள்
  வேதியன் காண்மினே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்