தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 103ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 49ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்கநாதர்.
இறைவி: ஜடாமகுடேஸ்வரி, அழகுசடை முடியம்மை.
ராவணனுடன் ஏற்பட்ட போரில் அறுந்த வால் வளர வாலிக்கு அருள் செய்ததால் வாலி நாதர் எனவும், கர்ப்பிணி பெண்ணின் தாகம் தீர்க்க தென்னங்குலைகளை வளைத்து கொடுத்ததால் குலைவணங்கீசர் எனவும், ஒரு சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்ததால் சீட்டிலிங்கநாதர் எனவும் பெயர் ஏற்பட்டது. சிவ அபராதம் நீங்க அனுமன் பூசை செய்த ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்று.
கோங்குமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடி முல்லை வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும் ஓங்குமா காவிரி வடகரை யடை குரங் காடுதுறை வீங்குநீர்ச் சடை முடி யடிகளார் இட மென விரும்பினாரே
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்