தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 213ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 96ஆவது சிவத்தலமாகும். இது நான்கு மயானங்களுல் ஒன்று. (கடவூர் மயானம், காழி மயானம், கச்சி மயானம் மற்றவைகளாகும்) இவற்றில் முதல் மூன்றும் பாடல் பெற்ற தலங்கள். நான்காவது கச்சி மயானம் ஒரு தேவார வைப்புத் தலம்.
இறைவன்: பலாசவனநாதர், ஞான பரமேஸ்வரர்.
இறைவி: பெரிய நாயகி,ஞானாம்பிகை.
பாலூரு மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான் நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து மாலூரும் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்