159. சிவபுரம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  182ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 65ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், புரமபுரீஸ்வரர்,சிவபுரநாதர்.

இறைவி: ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி.



இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம். ஆகையால் இத்தலத்தைக் காலால் மிதிப்பதற்கு அஞ்சி திருஞானசம்பந்தர் அங்கப் பிரதட்சினம் செய்து இறைவனை வழிபட்டார். பின்பு ஊர் எல்லையைத் தாண்டிச் சென்று அங்கிருந்தபடி இத்தல இறைவனை பதிகம் பாடி வழிபட்டார் என்று வரலாறு கூறுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.
ஒருமுறை இராவணன், தூய்மையற்றவனாய் இறைவன் வழிபட வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். உண்மையறியாது குபேரன் இராவணனுக்காகப் பரிந்து பேச, நந்தி சாபமளித்தார். தளபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாக இறைவனை வழிபட்டு வந்தான். ஒரு நாள் வடக்குப் பிரகாராத்தில் கோமுகம் அருகில் காணப்பட்ட செப்புப் பட்டயத்தில் இருந்த சுலோகத்தைப் படித்தான். மாசி மாதத்தில் சிவராத்திரி, சோமவாரம், பிரதோஷம் இவை மூன்றும் சேர்ந்து வரும் நாளில் உடற் குறையில்லாத ஆண் குழந்தையை பெற்றோர் பிடிக்க அரிந்து, ரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று அறிந்தான். அவ்வாறே வறுமையால் வாடிய தம்பதிகட்குப் பொருள் தந்து அவர்களைச் சம்மதிக்க வைத்து, மன்னன் வாள் கொண்டு அரியும் போது, குழந்தை, அன்னை சிங்கார வல்லியை வேண்டிட, அத்தாயும் இறைவனிடம் வேண்டினாள். இறைவன் மகிழ்ந்து தளபதியின் சாபம் நீங்கவே இவ்வாறு நேர்ந்ததாக அருளி, தளபதியைக் குபேரனாக்கினார். இதை நினைவூட்டும் வகையில் பெருமானின் முடியில் ரத்தத்துளி போன்று இருப்பதைக் காணலாம். 
 அங்கண் இனிது அமரும் நாள் 
	அடல்வெள் ஏனத்து உருவாய்ச்
செங்கண் நெடுமால் பணியும் 
	சிவபுரத்துச் சென்று அடைந்து
கங்கை சடைக் கரந்தவர்தம் 
	கழல் வணங்கிக் காதலினால்
பொங்கும் இசைத் திருப்பதிகம் 
	முன் நின்று போற்றிசைத்தார்.
- திருஞானசம்பந்தர்

பெருகும் பதிகம் பிறையணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை
திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர்பெருமான் கழல்வணங்கி
உருகும் சிந்தையுடன் போந்தே உமையொர் பாகர்தாள் பணிந்து
மருவும் பதிகள் பிறபணிந்து கலயநல்லூர் மருங்கு அணைந்தார்.
- சுந்தரர்

கருத்துகள்