தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 141 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 24 ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: யோகானந்தீஸ்வரர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேசுவரர்.
இறைவி: சாந்தநாயகி, சௌந்தரநாயகி.
பழையாறை வடதளி சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்று. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கி உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார்.
கீழ்த்தளி (பழையாறை)
தலையெ லாம்பறிக் கும்சமண் கையருள் நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே அலையி னார்பொழிலாறை வடதளி நிலையி னான்அடியே நினைந்து உய்மினே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்