165. சிறுகுடி

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  177  ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 60 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  சூக்ஷிமபுரீஸ்வரர், மங்களநாதர், சிறுகுடியீசர்

இறைவி:  மங்களநாயகி, மங்களாம்பிகை.







ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி சிறுகுடி தலத்திற்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்து வழிபட்டாள். சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாய் மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத்த தலத்திற்கு சூட்சுமபுரி என்றும் இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர் என்றும அழைக்கப்படுகிறார்.
 திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
  படமலி அரவுடை யீரே
படமலி அரவுடை யீருமைப் பணிபவர்
  அடைவதும் அமருல கதுவே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்