தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 174 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 57 ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர், திருமேனிநாதர்.
சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப் போன சூரியன் சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக் குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றது.
தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் தான் தோன்றி மாடத்துச் செக்கவார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ் தொடைபாடி மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுதுபோய் மீயச்சூர் பணிந்து ஏத்திப் பக்கம் பாரிடம் பரவநின்று ஆடுவார் பாம்புர நகர் சேர்ந்தார்.
- திருஞானசம்பந்தர்
பொன்னம் கொன்றையும் பூவணி மாலையும் பின்னும் செஞ்டசடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள்அக லார்இளங் கோயிலே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்