தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 180 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 63 ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: சற்குண நாதேஸ்வரர்.
இறைவி: சர்வாங்க சுந்தரி.
சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு. "கருவிலி" என்ற பெயரே "இனிமேல் தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும் நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும்
மட்டிட் டகுழலார் சுழ லில்வலைப் பட்டிட் டுமயங்கிப்பரி யாதுநீர் கட்டிட் டவினை போகக் கருவிலிக் கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்