175. திருச்சேறை

 தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  212 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 95 ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்.

இறைவி:  ஞானாம்பிகை, ஞானவல்லி.








மார்க்கண்டேயர் வழிபட்டு அவரது பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிண விமோசன லிங்கேஸ்வரர் எழுந்தருளி உள்ளார். 
 முறியுறு நிறமல்கு முகிழ்முலை
  மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட
  வுரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு
  நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம்
  வளநகர் சேறையே.
- திருஞானசம்பந்தர்

 பெருந்திரு இமவான் பெற்ற 
  பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய 
  மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால் 
  அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச் 
  செந்நெறிச் செல்வ னாரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்