தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 114 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 27 ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: நாகேஸ்வரர்.
இறைவி: பிரஹந்நாயகி.
சொன்மலிந்த மறை நான்காறங்கமாகிச் சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதிபோலும் கன்மலைந்த கயிலைமலை வாணர் போலும் கடல்நஞ்சம் உண்டுஇருண்ட கண்டர்போலும் மன்மலிந்த மணிவரைத் திண்தோளர்போலும் மலையரையன் மடப்பாவை மணாளர்போலும் கொன்மலிந்த மூவிலைவேற் குழகர்போலும் குடந்தைக்கீழ்க் கோட்டத் தெங்கூத்தனாரே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்