180. திருக்கொண்டீச்சரம் (திருக்கண்டீஸ்வரம்)

இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 189வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 72வது ஸ்தலமாகும். இது "சரம்" என்ற பெயருடன் முடிவடையும் ஏழு தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும், 




  1. திரு முண்டீசரம்
  2. திரு பட்டீஸ்வரம்
  3. திரு நறையூர் சித்தீசரம்
  4. திரு கொண்டீசரம்
  5. திரு புகலூர் வர்த்தமனீசரம்
  6. திரு ராமதீசரம்
  7. திரு கேதீசரம்

இறைவன்:   பசுபதீஸ்வரர்.  
இறைவி: சாந்தநாயகி.




ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கயிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். பசுவாக மாறிய அன்னை வில்வவனத்தில் இறைவனைத் தேடி வரும்போது தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள். அவ்வாறு அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. பசு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். 




பால் லிங்கத்தின் மீது பட்டவுடன் அம்பிகை தன் சுயவுரு பெற்றாள். லிங்கத்தினிலிருந்து இன்னும் ரத்தம் வடிவதைக் கண்ட அம்பிகை தனது கரத்தினால் லிங்கத்தின் சிரசைப் பற்ற, ரத்தம் வருவது நின்று இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சாபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். 










வரைகிலேன் புலன்க ளைந்தும் 
  வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று 
  புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத் 
  தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித் 
  திருக்கொண்டீச் சரத்து ளானே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்