இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 193வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 76வது ஸ்தலமாகும். மூவர் பாடல் பெற்ற தலம் என்ற பெருமையுடைய 44 கோவில்களில் இதுவும் ஒன்று.
இறைவன்: வர்த்தமானேச்சுரர்.
இறைவி: கருந்தார் குழலி, மனோன்மணி.
திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்திற்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தை திருஞானசம்பந்தர் மட்டுமே பதிகம் பாடியுள்ளார்.
ஈசன் ஏறமர் கடவுள் இன்னமும் எந்தை யெம்பெருமான் பூசு மாசில் வெண்ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரில் மூசு வண்டறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடிமேல் வாச மாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்