183. இராமனதீச்சரம் (திருக்கண்ணபுரம்)

இது தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் 194வது ஸ்தலமாகும், சோழ நாட்டில் காவேரி நதியின் தெற்கு கரையில் அமைந்த 77வது ஸ்தலமாகும். 

இறைவன்:   அக்னிஸ்வரர், சரண்ய புரீஸ்வரர், கோணப்பிரான்.  

இறைவி: கருந்தார்குழலி, சூளிகாம்பாள்.






ராமர், சீதையை மீட்க இலங்கை சென்ற போது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவ வழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே வரும்போது, ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து காட்சி தந்ததாகவும், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராமர் சிவ வழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி "ராமநாதசுவாமி" என்று பெயர் பெற்றார்.
சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பாலிகொள்ளும் அவான்கோபப்
பொங்கரவு ஆடலோன் புவனியோங்க
எங்குமன் இராமன தீச்சரமே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்